Sunday, January 22, 2017

SIPCOT

சிப்காட்
        தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகம் (சிப்காட்) தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியை உருவாக்க ஆண்டு 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு மாநிலத்தில் பின் தங்கிய பகுதிகளில் தொழிற்பூங்காக்களை அமைக்க அடிப்படை மற்றும் விரிவான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் அப்பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கிறது. சிப்காட் இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழிற்பூங்காக்களையும், தமிழ்நாடு முழுவதும் ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் (SEZ) உருவாக்கியுள்ளது. இந்த 19 தொழிற்பூங்காக்கள் பர்கூர், செய்யாறு, கடலூர், கங்கைகொண்டான், கும்மிடிப்பூண்டி, ஓசூர், மாப்பேடு, இருங்காட்டுக்கோட்டை, மானாமதுரை, நிலக்கோட்டை, ஓரகடம், பெருந்துறை, பிள்ளைபாக்கம், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை, சிறுசேரி, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி மற்றும் தேர்வாய் கண்டிகை ஆகிய ஊர்களில் அமைந்துள்ளது. தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகத்தின் (சிப்காட்) செயல்பாடுகள்

        • தொழில் வளாகம் / பூங்கா / வளர்ச்சி மையம் போன்றவற்றை உருவாக்குதல்

        • துறை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) நிறுவுதல்

        • சிறப்பு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துதல்

செய்யாறு சிப்காட்
        சென்னை புறநகர் பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓரகடத்தில் தொகுப்பாக நிலம் கிடைப்பது அரிது என்பதாலும் செய்யாறு சென்னைக்கு அருகே இருப்பதாலும் செய்யாறில் தொழிற்பூங்கா தொடங்க முடிவு செய்யப்பட்டது. அரசு அதன் தொழில் பூங்காவை அமைக்க 1995 ஆம் ஆண்டு மாங்கல், செல்லப்பெரும்புளிமேடு மற்றும் மாத்தூர் கிராமங்களில் 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. பின் 2006ம் ஆண்டு ஏக்கருக்கு ரூ.90, 000 வீதம் 99 ஆண்டுகளுக்கு 275 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட்டது. தொழில் வளாகத்திற்கு மிகவும் தேவையான உள்கட்டமைப்புகளை உயர்த்த, செய்யாறு ஆற்றில் இருந்து நீரை சேமிக்க ரூ 7.80 கோடி செலவில் மேல்நிலை தொட்டிகளையும் மற்றும் 52MVA மின்நிலையத்தையும் நிறுவியுள்ளது.

        • செப்டம்பர் 2009ல், ரூ.300 கோடி செலவில், 275 ஏக்கரில் லோடஸ் பூட்வியர் (Lotus Footwear) நிறுவனம் தனது உற்பத்தியை தொடங்கியது. இங்கு நைக் (Nike), சாலமன் (Solomon), கேன்வாஸ் (Canvas) போன்ற பிரபலமான காலணிகள் தயாராகிறது. இங்கு தயாராகும் காலணிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

        • நவம்பர் 2009ல் தமிழ்நாடு அமைச்சரவை மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் 450 ஏக்கரில், ரூ.1800 கோடி செலவில் அதன் வாகன தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க ஒப்புதல் அளித்தது. இந்த பிரிவு டிராக்டர்கள், SUVக்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் கார் பாகங்களை தயாரிக்கும்..

        • ஜனவரி 2010ல் அசோக் லேலண்ட் (Ashok Leyland) மற்றும் பின்லாந்தைச் சார்ந்த அல்டிம்ஸ் (Alteams) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான ஆஷ்லே அல்டிம்ஸ் (Ashley Alteams) அதன் உற்பத்தியை தொடங்கியது. இந்த உயர் அழுத்த அச்சு வார்ப்பின் திறன் ஆண்டிற்கு 7000 டன் ஆகும். இது ஆட்டோமொபைல் மற்றும் தொலைத்தொடர்பு பாகங்களை தயாரிக்கிறது.

        • தற்போது சிப்காட்டில் சர்கம் டை கேஸ்டிங் (Sargam Die Casting), ஆஷ்லே அல்டிம்ஸ் (Ashley Alteams), லோடஸ் பூட்வியர் (Lotus Footwear) மற்றும் ஆக்ஸில்ஸ் இந்திய (Axles India) ஆகிய நிறுவனங்கள் இயங்கி கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment